திருவொற்றியூர் டிச1 அடுத்தவர் மனைவி மீது கொண்ட சந்தேகத்தில் சரமாரியாக குத்திக் கொன்ற கள்ளக்காதலன்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

வியாசர்பாடி ஜே ஜே நகர் ஏழாவது தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன் இவரது மனைவி பிரியங்கா இவர்களுக்கு ராஜேஸ்வரி ராகுல் என்ற குழந்தைகள் உள்ளனர் கடந்த இரண்டு வருடங்களாக செல்வேந்திரனை விட்டு பிரியங்கா பிரிந்து தனியாக சென்று சின்ன நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜ் வயது 31 என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு இரண்டு பேரும் ஒன்றாக வாழ்ந்ததாக தெரிகிறது கடந்த புதன்கிழமை பிரியங்கா வீட்டை விட்டு சென்றுள்ளார் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்துள்ளார்.

அவர் மீது சந்தேகம் அடைந்த கோவிந்தராஜ் பிரியங்காவை எங்கு சென்றாய் என கேட்டு தகராறு செய்துள்ளார் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது மீண்டும் இரவு சமாதானப்படுத்தி சரக்கு அடிக்கலாம் வா என கூப்பிட்டு மணலி பகுதியுள்ள தொழிற்சாலையின் பின்புறம் காலி இடத்தில் இரண்டு பேரும் மது அருந்தி உள்ளனர் அப்போது மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்துள்ளது கோவிந்தராஜ் சரக்கு அடித்துக் கொண்டிருந்த பாட்டிலை உடைத்து சரமாரியாக கழுத்து வயிற்று பகுதிகளில் பிரியங்காவை குத்தியுள்ளார் இதனால் சம்பவ இடத்திலேயே பிரியங்கா இறந்துள்ளார்

நள்ளிரவு ஒரு மணி அளவில் கோவிந்தராஜ் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு வந்து நான் எனது காதலியை குத்திக் கொன்று விட்டேன் எனக் கூறியுள்ளார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வியாசர்பாடி போலீசார் அங்கு பிரியங்கா இறந்து கிடந்ததை பார்த்து அந்தப் பகுதி மணலி காவல் நிலைய எல்லை பகுதி என்பதால் உடனே மணலி காவல்துறையினரை வரவழைத்தனர்.பிரியங்காவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கோவிந்தராஜை மணலி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *