கம்பம் நகரில் காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக திருவிழா
வில் அன்னதானம் வழங்கிய வாணியர் சங்கத் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற அருள்மிகு காசி விசாலாட்சி அம்மன் உடனாகிய அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் திங்கட்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்று முடிந்தது
இந்த விழாவில் பங்கேற்ற ஆன்மீக பக்தர்களுக்கு தேனி மாவட்ட வாணியர்கள் சங்கம் சார்பாக அன்னதானம் வாணியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை புரவலர் ரத்தினிம் பஸ் சர்வீஸ் அதிபர் ஆ சுந்தரவடிவேல் தேனி ரத்தினம் ஆர்த்தோ சென்டர் டாக்டர் ஆர் ராஜ மணிகண்டன் ஆகியோர் அன்னதானம் வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் இராமகிருஷ்ணன் அறங்காவலர்கள் கே. ஆர். ஜெய பாண்டியன் முருகேசன் கம்பம் நகர் தெற்கு வாணியர் சங்கத் தலைவர் எல் ராஜா என்ற பாலசுப்ரமணியன் வடக்கு வட்ட வாணியர் சங்கத் தலைவர் ஜெயபாலன் மாவட்ட செயலாளர் கனகு என்ற மாசாணம் மாவட்ட பொருளாளர் சி.எஸ். சேகர் உள்ளிட்ட தேனி மாவட்ட வாணியர் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அன்னதானத்தை சிறப்பாக வழங்கினார்கள் இந்த அன்னதானத்தில் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சுமார் 50 ஆயிரம் பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது