நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் காவல்துறை மற்றும் நியூ டான் சமூக சேவை நிறுவனம், பிஜிபி செவிலியர் கல்லூரி இணைந்து நடத்திய உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தின பேரணி நடைபெற்றது.
பேரணியை பரமத்தி வேலூர் போக்குவரத்து ஆய்வாளர் ஜாஜகான் , பேரூராட்சித் தலைவர் லட்சுமி முரளி, சமூக ஆர்வலர் குமார் சின்னுசாமி நியூ டான் இயக்குனர்ஜெயராணி ஆகியோர் தலைமை வகித்து கொடி அசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர்.
பேரணி பரமத்தி வேலூர் அரசு கால்நடை மருத்துவமனை எதிரில் துவங்கி பேருந்து நிலையம், திருவள்ளுவர் சாலை, நான்கு ரோடு பழைய தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து மீண்டும் அரசு கால்நடை மருத்துவ மனையை வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் எய்ட்ஸ் ஆல் ஏற்படும் தீமைகள் குறித்தும் , எய்ட்ஸ் நோய் வருவதை தவிர்ப்பதற்கு உண்டான வழிமுறைகள் குறித்தும் பொது மக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாதைகளை கையேந்தி சென்றனர். விழிப்புணர்வு பேரணியில் டாக்டர் பிரகதீஸ்,, பிஜிபி செவிலியர் கல்லூரி முதல்வர் செம்பக லட்சுமி,பரமத்தி வேலூர் அரிமா சங்க தலைவர் அருண்குமார், பிஜிபி செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ச,மூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்