கோடை நெல்அறுவடை துவக்கம்.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட71
வருவாய் கிராமங்களில் 6ஆயிரம் ஏக்கரில் செய்யப்பட்ட கோடை சாகுபடி நெல் அறுவடை பணிகள் இம்மாத இறுதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாகமேட்டூர் அணை காலதாமதமாக திறக்கப்பட்டு முன் கூட்டியே மூடப்பட்டது.

அக்கால கட்டங்களில் வடகிழக்கு பருவமழையை நம்பியே சம்பா சாகுபடி பணிகள் மேற்க்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக உரிய நேரத்தில் சம்பா சாகுபடி பணிகளை துவங்க இயலாமல், வடகிழக்கு பருவமழை தொடங்கிய
பின்னரே சாகுபடி பணிகள் காலதாமதமாக துவங்கியது. மேலும், அப்போது மூன்று போக சாகுபடி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ஒரு போக சம்பா சாகுபடியை மிகுந்த போராட்டத்துக்கு இடையே மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடந்தாண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் முன்கூட்டியே மேட்டூர் அணை பாசனத்திற்காக
திறக்கப்பட்டது.

இதையடுத்து சம்பா சாகுபடி பணிகள் துவங்குவதில் காலதாமதம் இல்லை. இருப்பினும் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாகவே டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாகவிதை விடும் பணிகளில்
காலதாமதம் ஏற்பட்டது.

மேலும் புழதி உழவு செய்து நேரடி விதைப்பு செய்வதும் வாய்ப்பில்லாமல் போனது. வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளான் ஆறு மூலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு 8ஆயிரத்து 950 எக்டேரில் சம்பா வும், சுமார் 4ஆயிரம் எக்டேரில் குறுவை அறுவடைக்கு பின் மேற்க்கொள்ளக்கூடிய தாளடி மேற்க்கொள்ளப்பட்டது.

இவைகள் அறுவடைப் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் கோடை சாகுபடி பணிகள் தீவிரமடைந்தது. இந்நிலையில் கோடை சாகுபடி பணிகள் தீவிரமடைந்தது. இந்நிலையில் கோடை சாகுபடியாக நெல் சாகுபடி பணிகள் கடந்த
மார்ச் மாதம் தொடங்கியது.

வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்களில் சுமார் 2,500 எக்டேர் நிலப்பரப்பில் கோடை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் கோடை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கடந்த15 தினங்களாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் கோடை நெல் சாகுபடி அறுவடை பணிகள் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *