நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கந்தநகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு தன்னாசியப்பன் சுவாமிக்கு குடமுழுக்கு நடைபெற்றது கடந்த மூன்று தினங்களாக யாக குண்டங்கள் யாக வேள்வி யாக பூஜைகள் புராணாகுதி நடைபெற்றது சிவாச்சாரியார்கள் வேதங்களை முழங்க யாக வேள்வியில் வைக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் அதிகாலையில் எடுத்துவரப்பட்டு ஏழு மணி அளவில் பக்தர்கள் கோஷங்கள் எழுப்ப அதிர்வேட்டுகள் முழங்க மேளம் வாத்தியங்களுடன் தன்னாசியப்பன் சுவாமிக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.
இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் Ex MLA. KS. மூர்த்தி , மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செயலாளர் கே எஸ் மூர்த்தி, மகிழ் பிரபாகரன்,நகர செயலாளர் முருகன் ஆகியோருக்கு கோயில் நிர்வாகத்தினர் குடமுழுக்கு விழா குழுவின் சார்பில் சால்வை மாலைகள் அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. முன்னதாக அங்கு குழுமியிருந்த மகளிர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தீபாராதனை காண்பித்து பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பரமத்தி வேலூர் கந்த நகர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு
காலையிலிருந்து இரவு வரை அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மகிழ் பிரபாகரன் செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில்மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், ஓட்டுனர் அணி உதயகுமார்,நகர மாணவரணி அமைப்பாளர் கிட்டு தமிழ், ஆகியோர் கலந்து கொண்டனர்.