பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் ஊர்ப்புற நூலகத்திற்கு புதிய அலமாரி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தமிழக துணை முதல்வர்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கோவைபுதூர் பகுதி இளைஞர் அணி சார்பாக நடைபெற்றது..
கோவைபுதூர் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ஹரி.பரத் கிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இதில், கோவை மாநகராட்சி 91 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் கோவை மாநகராட்சி நியமன குழு உறுப்பினரும் ஆன மு.ராஜேந்திரன் தலைமை வகித்தார்..
நிகழ்ச்சியில் முன்னதாக குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் பயிலும் 500 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களாக நோட்டு புத்தகம்,பென்சில்,இரப்பர்,ஷார்ப்னர்,மற்றும் பென்சில் பாக்ஸ் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது..
இதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள ஊர்ப்புற நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பதெற்கு என புதிய அலமாரியை மாமன்ற உறுப்பினரும் கோவை மாநகராட்சி நியமன குழு உறுப்பினரும் ஆன மு.ராஜேந்திரன் அவரது சொந்த செலவில் வழங்கினார்..
இந்நிகழ்ச்சியில்,பார்வதி புரம் நாகராஜ்,குளத்துப்பாளையம் ராஜகோபால்,குளத்துப்பாளையம் சண்முகம்,காசி தர்மர்,இளைஞரணி திருவரசன்,ரம்யா,ராதா,ராஜா,அருள்,பிரியா,காளிதாஸ் ,மற்றும் இளைஞர் அணி உடன்பிறப்புகள் பிரித்வி.மோகனா சுந்தர், கிருஷ்ணா இஷான் அஹ்மத், 90 வது வட்ட இளைஞர் அணி அமைப்பாளர் குவாசித் அஹமத் மற்றும் துணை அமைப்பாளர்கள் முஹம்மத் ஆசிப், சித்தார்த்.இரா, முகமது பர்ஹான், ஹரி கிருஷ்ணன், அருண் குமார் மற்றும் 91 வது வட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா, மற்றும் துணை அமைப்பாளர்கள் பிஜு, பவித்ரன், தீபக் குமார், மணிகண்டன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்..