கமுதியில் மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை உயர்த்தகோரி ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உதவித்தொகையை உயர்த்தி வழங்காத மத்திய மாநில அரசின் போக்கை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டியும் கருப்புபட்டை அணிந்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கமுதி சிறுவர் பூங்கா அருகே நடைபெற்றது
இந்த ஆர்பாட்டத்திற்கு கமுதி தாலுகா தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார் மாவட்ட துனைத்தலைவர் முத்துராமலிங்கம் தாலுகா செயலாளர் நீராவி முருகேசன் தாலுகா பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த ஆர்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கமுதி நாகையா
நீராவி முருகேசன் அபிராமம் கருப்பையா பெருநாழி அர்ஜுனன் மற்றும் பொம்மி முதுகுளத்தூர் தாலுகா செயலாளர் ஆரோக்கியபிரபாகர் முதுகுளத்தூர் தாலுகா தலைவர் முனியசாமி ஆகியோர் பேசினர் கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் முருகன் நிறைவுரை வழங்கினார் இக்கூட்டத்தில் கமுதி தாலுகா குழு சார்பில் 63நபர்களும் முதுகுளத்தூர் தாலுகா குழு சார்பில் 12பேர் அஎன மொத்தம் 75 பேர்கலந்து கொண்டனர்