வீடு இடிந்தவா்களுக்கு திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா நிதியுதவி
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் டித்வா புயலை யொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டால் உடனடியாக மாவட்டசெயலாளர் மற்றும் அந்த பகுதியை சார்ந்த திமுக நிா்வாகிகள் உதவி செய்திட வேண்டும். என்று கேட்டிக்கொண்டிருந்தாா்.
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி பகுதியில் உள்ள இந்திராநகா் கீழத்தெரு பகுதியில் கன மழையால் வீடு இடிந்து சேதமான உாிமையாளருக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய திமுக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா நோில்சென்று மழையால் இடிந்து சேதமான வீடுகளை பாா்வையிட்டு அதன் உாிமையாளா்களுக்கு வடக்கு ஓன்றிய திமுக சாா்பில் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினாா்.