மாப்பிள்ளையூரணி பகுதி மக்கள் கோாிக்கை கைகலப்பில் காயம் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட பட்டியிலின பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து பெய்தவடகிழக்கு பருவ மழையின் காரணமாக வடக்கு சோட்டையன்தோப்பு உள்ளிட்ட பல்ேவறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது மட்டுமின்றி குடியிருப்புகளுக்குள் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதை முழுமையாக தீர்த்து வைக்க வேண்டும் என்று அரசுக்கும் அரசுத்துறை அதிகாாிகள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் கோாிக்கை வைத்தனா்.
இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரான சண்முகையாவிடம் எங்கள் பகுதியில் பல நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளதோடு நோய் தொற்றுகள் பரவும் சூழல் உள்ளதாகவும், உடனே தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் பொதுமக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்குமிடையே வார்த்தைப் போர் மூண்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ சண்முகையாவுடன் உடன் சென்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி அந்த பகுதி பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியிலுள்ள குடியிருப்புகளில் புகுந்து அங்குள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி விட்டு தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி உள்ளிட்ட பலா் தலைமறைவாயினர் இதனையெடுத்து படுகாயங்களுடன் காளியம்மாள், மாரிஸ்வரி மற்றும் வசந்த் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


தகவலறிந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது கொலை முயற்சி, தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் தற்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற ெதாகுதி முழுவதும் ஓவ்வொரு பகுதியிலும் உள்ள கோாிக்கைகளுக்காக பல்வேறு தரப்பினரும் போராட்ட களத்தில் ஈடுபட்டுள்ளனா். என்பது குறிப்பிட தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *