விபத்தில் சிக்கிய விலாசம் தெரியாத நபர் சிகிச்சை பலனின்றி மரணம்!-நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

திருச்சி மாநகராட்சி ஒத்தக்கடை சாலை கண்டோன்மெண்ட் நீதிமன்ற சாலை தனியார் உணவகத்தின் முன்பு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சாலையை கடக்க சென்ற நபர் மீது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வந்த அடையாளம் பதிவெண் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில் விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இடது காலிலும் வலது நெஞ்சிலும் காயம் ஏற்பட்டது.

விபத்தில் சிக்கியவர் உயிர் காக்கும் வகையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்தவர் உறவினர்கள் இல்லாத நிலையில் மயக்க நிலையில் இருந்தார். திருச்சி மாநகரம், போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்கையில், சம்பவம் நடந்த இடத்தில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் பதிவெண் தெரியாத வாகனம் விபத்தை ஏற்படுத்தியுள்ளதை வழக்கு பதிந்து உள்ளனர்.

மேலும் உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்தவர் கணேஷ் என பெயரை மட்டும் கூறியுள்ளார். மேற்படி நபர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இறந்த நபர் உடலை யாரும் உரிமை கோரவில்லை. உடற்கூராய்வு செய்யப்பட்டது. உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி மாநகரம், போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு முதல் நிலைக் காவலர் கிருஷ்ணகுமார் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார்.தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் முதல் நிலை காவலர் முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் இறுதி சடங்கு செய்து யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *