கோவையில் நடைபெற்று வரும் விவசாய கண்காட்சியில் சிபி நிறுவனத்தின் நெப்டியூன் வகை நவீன நீர்ப்பாசன முறைகள் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது…

கோவை கொடிசியா வளாகத்தில்,21 வது பதிப்பாக நடைபெறும் விவசாய கண்காட்சியில் கொரியா, இஸ்ரேல்,, ஜப்பான், ஸ்வீடன் , பிரான்ஸ்,ஆகிய நாடுகளில் இருந்தும் , மகாராஷ்டிரம்,குஜராத்,பஞ்சாப்,மத்தியப் பிரதேசம், ஆந்திரம்,சத்தீஸ்கர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நவீன தொழில் நுட்பம் சார்ந்த வேளாண் சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர்..

சுமார் 450 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற உள்ள இக்கண்காட்சியில், வேளாண்மையில் முக்கிய பங்கு வகிக்கும் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனத்தில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

கொடிசியா பி அரங்கில் சிபி நிறுவனத்தின் நெப்டியூன் மாடல் நீர் மற்றும் மருந்து தெளிப்பான் வகைகள் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இது குறித்து சிபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயேஷ் ராம் கூறுகையில்,அடுத்த தலைமுறை விவசாயத்தை எதிர் கொள்ளும் விதமாகநவீன ட்ரோன் கருவிகள்,ஆட்டோமேஷன்,சூரிய ஒளி பம்புகள், நுண் நீர்ப்பாசனம்,துல்லியப் பண்ணை, பண்ணை இயந்திரமயமாக்கல், குறைந்த நீர் பயன்பாட்டு விவசாய முறைகள், மதிப்பு கூட்டுதல் , உபகரணங்கள், பாசனக் கருவிகள், உள்ளிட்ட பல்வேறு வகையான வேளாண் சார்ந்த நவீன தொழில் நுட்பத்தில் எங்களது நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்..

குறிப்பாக நவீன வகை நீர் மற்றும் உரம் தெளிப்பான் ட்ரோன்களை விவசாயிகளே எளிதில் பயன்படுத்தும் வகையில் நெப்டியூன் மாடல் வழங்கி வருவதாக அவர் கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *