தனியார் கல்லூரி நிர்வாகம் மீது பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்
பாத்திமா நகர் ஆறாவது தெருவில் கழிவுநீர் கான் கட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வந்தது
அப்போது காமராஜ் கல்லூரி நிர்வாகிகள் கழிநீர்கான் செல்வதற்கு குழி தோண்ட கூடாது என்று கூறியது அடுத்து அப்பகுதி பொதுமக்கள் இது கழிவு நீர் கான் செல்வதற்காக அரசு சார்பில் குழி தோண்டப்படுகிறது
இதனை யாரும் தடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் கூறினார்கள் ஆனால் காமராஜ் கல்லூரி நிர்வாகம் அங்கு இருந்த பணியாளர்கள் பொதுமக்களை இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்
இதனை அடுத்து பாத்திமா நகர் பொதுமக்கள் தென்பாகம் காவல் நிலையத்தில் காமராஜ் கல்லூரி நிர்வாகம் மீது புகார் அளித்துள்ளனர் புகார் மீது காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது