கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட அரசு கல்லூரியில் நவம்பர் 2025 ஒற்றைப் பருவத் (Odd Semester Examination) தேர்வுகள் அக்டோபர் 31ம் தேதி துவங்கி நவம்பர் 28ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிகழ்வில் முதல்வர் (பொ) மற்றும் தேர்வுக் நெறியாளர் முனைவர் சா.சுதா மற்றும் துணைத்தேர்வு நெறியாளர் முனைவர் கு.ஜாகிர் உசேன்-ன் தொடர் முயற்சியால் அரசுக் கல்லூரி வரலாற்றிலும், தமிழகத்தில் முதல் முறையாக தேர்வுகள் முடிந்த மறுநாளே (29.11.2025) அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு அரும்பாடுபட்ட கரூர் அரசு கலைக் கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக பணியாளர்கள் வ.நாளாதேவி, மு.கற்பகம்,சு.செந்தில் ராம மூர்த்தி, ர.விஜய் கணேஷ் மற்றும் ர.புவனேஸ்வரி உதவியாளர் ச.சிவகாமி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்கள் உடன் சக கல்லூரி ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.