நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அகலங்கன், செம்பியன் மகாதேவி, நாரணமங்கலம், ஆய்மழை உள்ளிட்ட ஊராட்சிகளில் டிட் வா புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் கூரை வீடுகளின் சுவர்கள் இடந்து விழுந்ததால் பொதுமக்கள் அவதி தமிழக வெற்றி கழகத்தினின் மாவட்ட பொறுப்பாளர் எஸ் கே ஜி ஏ .சேகர் தலைமையில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல்.
மேலும் 2017 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பிரதம மந்திரி வீடுகள் முழுமை அடையாமலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என பொதுமக்கள் கூறிவருகின்றனர்.
மேலும் அகலங்கண் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு செல்லும் வடிகால் வாய்க்காலின் பாலம் சிதலமடைந்து கான்கீரிட் கம்பிகள் வெளியே தெரியும்
அவல நிலையாக உள்ளது.
இந்த பாலம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு செல்வதற்கு கிராம புற சாலையாக உள்ளது என தவேக கட்சியினரிடம் புகார் கூறி வந்தனர். மழை மற்றும் பேரிடர் காலங்களில் முதியோர்கள்,பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருவதற்கும், 108 ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கும் முறையான சாலை வசதி இல்லை என்றும் உடனடியாக அந்த சாலை மற்றும் பாலங்களை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் பேட்டி அளித்துள்ளனர்.
நிகழ்வில் கீழ்வேளூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தளபதி முருகேசன் ஒன்றிய பொருளாளர் புகழ் மற்றும் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கேசவன் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கணேஷபாபு மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்
ஊராட்சி பொறுப்பாளர்கள் வார்டு,கிளை மற்றும் பிற அணி சார்ந்த அனைத்து பொறுப்பாளர்களும் பார்வையிட்டனர்…