கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம்
இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் தொழில் நுட்பக் கல்லூரியில், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதுமை நிறுவனத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் “நிமிர்ந்து நில்” என்றதலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் முதன்மை பயிற்சியாளர் பொன்வேல் முருகன் பங்கேற்று இத்திட்டதின் வரைமுறைகளை எடுத்துரைத்தார்.
மேலும் மாணவ, மாணவிகள் தொழில் மேம்பாடு குறித்து, தங்களது புதுவிதமான யோசனைகள் மற்றும் கருத்துக்களை சமர்ப்பிக்க தேவையான வழிமுறைகளையும் அதில் வெற்றி பெற்று பரிசுத்தொகை பெரும் விவரங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் மாணவ, மாணவிகள் தொழில் முனைவோராகவும் உருவாகுவதற்கு ஊக்கப்படுத்தினார்.
முன்னதாக கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமர் வரவேற்று பேசினார். கல்லூரி தலைவர் அகமதுயாசின் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியை நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில்முனைவோர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியை ரஞ்சிதம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.