மேட்டுப்பாளையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி காரமடை வட்டார வள மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக உள்விளையாட்டு போட்டிகளான ஓவியம் வரைதல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட சிறிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் திருமதி ஸ்ரீ சுதா தமிழ் செல்வி, சிவசங்கரி ஆகியோர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் மைதிலி பொறுப்பு ஆசிரியர் பயிற்றுனர் சமூக ஆர்வலர் திரு ஜெயராமன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு சாபிரா பீபி, உதவி தலைமை ஆசிரியர் திரு.ராமச்சந்திரன் அரசு சாரா தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த திருமதிஅன்னபூரணி மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,
விழா நிறைவாக திரு.சுரேஷ் நன்றி கூறினார்.