செங்காட்டுப்பட்டி, பெருமாள் பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் வழங்கினார்

துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி,பெருமாள் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கு 02-12-2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ் நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார் வழங்கினார்.

செங்காட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 93 மாணவ மாணவிகளுக்கும், பெருமாள் பாளையம் தனபாக்கியம் நடராசா அரசு மேல்நிலைப் பள்ளியில் 72 மாணவ மாணவிகளுக்கும் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன்,ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் செங்கை செந்தில்,கிளை செயலாளர் ராமராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அசோகன், மாவட்ட பிரதிநிதிகள் செங்கை பெரியசாமி,கண்ணனூர் குமார், நடுவலூர் செல்வகுமார்,
வீரமச்சான்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காவேரி கணேசன், மாணவரணி பிரபாகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தமிழ் செல்வன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *