மதுரை ஹாக்கி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இரவு நேர மின்னொளியில் கொட்டும் மழையில் நடந்த ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா – சுவிட்சர்லாந்து அணி மோதிய 35 வது லீக் ஆட்டம் நடைபெற்றது.
4 கால் சுற்றுகளாக விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி இரு கோல்களை அடித்ததோடு பெனாலிட்டி கார்னர் முறையில் திவாரி சர்தாநந்த் ஒரு கோல் என முதல் கால் சுற்றிலயே 3 கோல்கள் அடித்து பார்வையாளர்களை அசத்தினர். பின்னர் 2 வது கால் சுற்றில் இந்திய அணி வீரர் சிங் அர்ஷ்தீப், பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து நான்காவது கால் சுற்றில் பெனாலிட்டி கார்னர் முறையில் திவாரி சர்தா நந்த் மேலும் ஒரு கோல் அடித்த நிலையில் 4 கால் சுற்றுகளின் முடிவில் இந்திய அணி 5 கோல்கள் அடித்து சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தினர்
இந்த லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து அணியினர் ஒரு கோல் கூட அடிக்க வில்லை
இந்திய அணி லீக் போட்டியில் வெற்றிபெற்றதால் ரசிகர்கள் உற்சாகமடைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
லீக் போட்டியில் சிறப்பாக ஆடி இரண்டு கோல்கள் அடித்த இந்திய அணி வீரர் திவாரி சர்தார்நந்த் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.இந்தியா – சுவிட்சர்லாந்து இடையே நடைபெற்ற லீக் போட்டியை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் மற்றும் மாணவ மாணவியர் வருகை தந்து கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் போட்டி முழுவதையும் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர். மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக இந்தியஅணி விளையாடியதால் போட்டிக்கு முன்பாக முன்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.