தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்திற்கு பட்ஜெட் கொடுக்கவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.. இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? தூத்துக்குடி விமான நிலையம் புதுப்பிக்க 350 கோடி, திருச்சி விமான நிலையம் புதுப்பிக்க 650 கோடி. வந்தே பாரத் ரயில்கள், 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. ஒரு மருத்துவக் கல்லூரியாவது டெல்லிக்கு சென்று பிரதமரை பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வாங்கி இருக்கின்றாரா? ஆனால், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும்போது 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தார்..
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொருட்கள் இலவசமாக மத்திய அரசு கொடுத்து வருகிறது. ஆனால் அதனை திமுக கொடுப்பதாக ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. அனைவருக்கும் வீடு கொடுக்கப்படுகிறது.. இதில் மத்திய அரசின் பங்கு 60% ஆகும்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொத்து வரி உயர்த்த மாட்டோம், மின்கட்டணம் உயர்த்த மாட்டோம் என்று கூறினார்கள் ஆனால் 300% உயர்த்தப்பட்டு இருக்கிறது. வீட்டு வரி, சொத்து வரி அனைத்தையும் உயர்த்திவிட்டு மத்திய அரசு எதையும் தரவில்லை என்று கூறுகிறார்கள்…
தமிழ்நாடு பட்ஜெட் போடும்போது ஒவ்வொரு மாவட்டம், ஊருக்கு என்றா பட்ஜெட் போடுகிறீர்கள்? ஒட்டுமொத்தமாக பட்ஜெட் போடப்படும்.. அதன் பிறகு அந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறதோ அதனை பிரித்துக் கொடுக்கப்படும். இந்திய நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இந்த பட்ஜெட் உள்ளது..
மோடி தலைமையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அற்புதமான முறையில் தந்திருக்கின்றார்.. ஆதிச்சநல்லூர் கலாச்சாரம் மையம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறி இருக்கின்றார்.. இதுவரை இல்லாத வகையில் கனிம வளங்கள் கண்டறிந்து அதனை எடுப்பதற்கு உண்டான முயற்சிகளை ஈடுபடுவோம் என்று சொல்லி இருக்கின்றார்கள்..
மருத்துவத்துறைக்கு 10,000 கோடி ரூபாய் என்று அதனை பிரித்து எந்த மாநிலம் என்று இனி ஒதுக்குவார்கள்… அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.. மகளிர்களுக்கு மாவட்டம்தோறும் மகளிர் விடுதிகள் கட்டப்படும் என்று கூறியிருக்கின்றார்..
உலக அளவில் தரத்தை உயர்த்த 40,000 கோடி ரூபாய் மதிப்பில் செமி கான்டெக்ட் ஒதுக்கப்பட்டிருக்கிறது அதனை இனிதான் பிரித்து எந்தெந்த மாவட்டம் என்று கூறுவார்கள். இதுதான் பட்ஜெட்.. பட்ஜெட் படித்துப் பார்க்காமல் அந்த பட்ஜெட் என்ன இருக்கிறது என்று ஆராயாமல் ஒன்றும் இல்லை என்று எப்போதும் கூறி வருகிறார்கள். பட்ஜெட்டில் ஒண்ணுமே இல்லை என்று சொன்னால் 2026 தேர்தலில் ஒண்ணுமே இல்லாமல் போய் விடுவார்கள்.
பட்ஜெட்டில் இளைஞர்களுக்க்காக வேலைவாய்ப்பு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.. இது கூட தெரியாமல் முதலமைச்சர் ஒன்றும் தரவில்லை என்றால் என்ன அர்த்தம்.. நீங்கள் கேட்காமலேயே ரயில்வேக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
விஜய்க்கு எந்த விஷயமும் தெரியாது.. விஜய் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றார். கட்சியின் தலைவராக இருந்து கொண்டு என்னவென்று தெரியாமல் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றார். டான்ஸ் ஆடினால் டான்ஸ் ஆடிக்கொண்டே தான் இருக்க வேண்டும்.. .
தமிழ்நாடு வளர்ச்சியை அதிமுக பாஜக சேர்ந்து தடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? தமிழகத்தில் 5 ஆண்டு ஸ்டாலின் தான். அப்புறம் எப்படி பாஜக படுகுழியில் தள்ள முடியும். பாலியல் வன்கொடுமை கற்பழிப்பு, லாக்கப் டெத் இதற்கு யார் காரணம்? யார் ஆட்சியில் நடக்கின்றது? 32 லாக்கப் டெத் மரணங்கள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நடைபெற்றிருக்கிறது.. பெண்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க முடியவில்லை..
திமுக கட்சியினர் 26 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு இருக்கின்றார்கள் என்றார்..
பேட்டி : நயினார் நாகேந்திரன், பாஜக மாநில தலைவர்.