திருச்சி திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் டிசம்பர் மாத கூட்ட நிகழ்வில் எழுத்தாளர் முனைவர் அருணா தினகரன்”சிறந்த நூல்” மாநில விருது 2025 (இளைய தோழனே உன்னால் முடியும்… உன்னை நம்பு…) பெற்றமைக்கு பாராட்டு விழா திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் தமிழ்செம்மல் கோவிந்தசாமி, விழாத் தலைவர் வைகுண்ட மூர்த்தி, செயலர் ஜெயலட்சுமி, பொருளாளர் பாலமுருகன், துணைத்தலைவர்கள் முனைவர் அருணாச்சலம், லட்சுமி நந்தகுமார், ஒருங்கிணைப்பாளர் லால்குடி முருகானந்தம், இணைச் செயலர் விஜயகுமார், மன்ற ஆலோசகர் கவிஞர் மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் குணசீலன், பன்னீர்செல்வம், நடராஜன், நாகப்பன் உட்பட பலர் பாராட்டினர். முன்னதாக நடராசன் வரவேற்க, நிறைவாக மகாலட்சுமி நன்றி கூறினார்.