போடி பாஜக நகரம் சார்பில் பஸ் மறியல்
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் நகர பாஜக தலைவர் சித்ராதேவி தண்டபாணி தலைமையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் அந்த தீர்ப்பை மதிக்காத ஆளும் திமுக அரசு மற்றும் அதற்கு காவடி தூக்கும் காவல்துறையை கண்டித்து போடி மெயின் ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் மெயின் ரோட்டில் தரையில் அமர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றச் சென்ற பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் எம்எல்ஏ வை கைது செய்த போலீசை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் கோஷமிட்டனர்.
இந்த பஸ் மறியலில் பாஜக விவசாய அணி மாவட்ட தலைவர் தண்டபாணி நகர் மன்ற கவுன்சிலர் நகர பாஜக பொதுச்செயலாளர் எஸ் மணிகண்டன் உள்ளிட்ட பாஜக நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்த பஸ் மறியலால் தேனி போடி மாநில நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.