மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா 9ம் ஆண்டு நினைவு நாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.


தூத்துக்குடி
மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான புரட்சித்தலைவி அம்மாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 5, நேற்று நாடு முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவி அம்மாவின் திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித் தலைவி அம்மாவின் திருவுருவப்படத்திற்கு தேங்காய் உடைத்து மீண்டும் 2026 இல் அம்மாவின் வழியில் கழக ஆட்சி அமைய தீபாரானை காட்டி பூஜை செய்து வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி 35 வது வட்டக் கழக செயலாளரும், தகவல் தொழில்நுட்ப பிரிவு மேற்கு பகுதி செயலாளருமான தூத்துக்குடி மணிகண்டன் ஏற்பாட்டில் அலங்கரித்து தூத்துக்குடி சிதம்பநகர் பகுதியில் அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வுகளில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாவட்ட கழக துணைச் செயலாளர் வசந்தா மணி, மாவட்ட கழக பொருளாளர் சேவியர், மாநில மீனவர் அணி துணைத் தலைவர் மனப்பாடு எரோமியாஸ், தலைமைக் கழக பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் காசிராஜன், பகுதி செயலாளர்கள் முருகன், நட்டார்முத்து, சுடலைமணி, சந்தனப்பட்டு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் எம்.பெருமாள், நாசரேத் ஜூலியட், பில்லா விக்னேஷ், நடராஜன், டேக் ராஜா, கே.ஜெ.பிரபாகர், அருண்ஜெபக்குமார், ஜெ.ஜெ.தனராஜ், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, பிள்ளைவிநாயகம், முனியசாமி, சரவணபெருமாள், சிவசங்கர், ராஜ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், முத்துக்கணி, நவ்சாத், தெர்மல் ஆனந்தராஜ், மண்டல தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணைச் செலயாளர் மந்திரமூர்த்தி, மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்விக்குமார், இணைச் செயலாளர் லெட்சுமணன், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், டைகர் சிவா, தலைமைச் கழக பேச்சாளர் முருகானந்தம், ஜான்சன்தேவராஜ், எ.கே.மைதீன், வர்தக அணி சுகுமார், அலெக்ஸ்.ஜி, சண்முகபுரம் மாடசாமி, ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், மிக்கேல், பொன்ராஜ், இசக்கிமுத்து, எஸ்.கே.மாரியப்பன், ஹார்பர் பாண்டி, கே.கே.பி.விஜயன், கொம்பையா, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மெஜுலா, சாந்தி, இந்திரா, இராஜேஸ்வரி, தமிழரசி, அன்னபாக்கியம், முத்துலெட்சுமி, ஷாலினி, ஸ்மைலா, சரோஜா, பத்மா, அகிலா, மாணவர் அணி முகமது காலிப் உசேன், கே.டி.சி.ஆறுமுகம், ஜவஹர், சங்கரநாராயன், வக்கீல் ராஜகுமார் அபிரகாம், இம்ரான், அணில் ராஜ், தீனா வசந்த், கே.ஏ.பி.ராதா, வெங்கடேஷ், பொன்னம்பலம், ஆட்டோ ஐயப்பன், வட்ட கழக செயலாளர்கள் ஜனார்தனன், டேவிட் ஏசுவடியான், சங்கர், சந்திரசேகர், ஜெரால்டு, மணிகணேஷ், ரெங்கன், ரகுநாதன், உதயசூரியன், ஜெயக்குமார், ஈஸ்வரன், கனகவேல், தாமஸ், பூர்ணசந்திரன், செல்வராஜ், மாடசாமி, கண்ணையா, அத்திமரபட்டி முருகேசன், மாரிமுத்து, அசோகன், எம்.டி.ராஜா, சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, சம்மபடி பழனி, பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, யுவன்பாலா, தளவாய் ராஜ், உதயகுமார் உள்ளிட்ட பிற சார்பு அணிநிர்வாகிகள்,மகளிரணியிணர்,தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *