நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 7708616040
தலைஞாயிறு அருகே செம்பியவேளூர் பகுதியில் கனமழை காரணமாக சுமார் 40 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலத்தை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் விவசாயிகள் வேதனை…
நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 75000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவிலான விளைநிலத்தை மழை நீர் சூழ்ந்துள்ளது.குறிப்பாக தலைஞாயிறு ஒன்றியம் நத்தப்பள்ளம் ஊராட்சிக்குட்பட்ட செம்பியவேளூர் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலத்தில் 40 ஏக்கருக்கு மேல் உள்ள நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.
20 முதல் 30 தினங்களே ஆன இந்த நெற்பயிர்கள் இளம் வயதில் மழைநீர் சூழ்ந்து வடியாததால் அதன் வேர் பகுதி அழுகிய நிலையில் காணப்படுவதால் கூட்டுறவு வங்கிகளிலும் , தனியார் வங்கிகளிலும் நகைகளை வைத்து கடன்களை பெற்று சாகுபடி செய்த விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.இது குறித்து அரசு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு நிவாரணமும், இன்சூரன்ஸூம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.