அம்பேத்கரின் 69வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சட்ட மாமேதை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 69 வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் தனராஜ், ஆகியோர் ஏற்பாட்டில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில்
அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார், மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல்,முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட கழக பொருளாளர் சேவியர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்,ராஜா, மாவட்ட அம்மா பேரவைஇணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம் பொன்மலர் .மனுவேல்ராஜ், பகுதி கழகச் செயலாளர்கள் முருகன், நட்டார் முத்து,சந்தனபட்டு,ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன் , முன்னாள் அரசு வழக்கறிஞர் அண்ட்ரூமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் முனியசாமி , தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், நிர்வாகிகள் தென்திருப்பேரை கந்தன், பாலமுருகன், பிரேம் ஆனந்த், வட்டச் செயலாளர் அருண்ராஜா, கொம்பையா ,மகளிர் அணி நிர்வாகிகள் இந்திரா ,முத்துலட்சுமி,ஷாலினி ,மெஜிலா, சாந்தி, தமிழரசி, அன்னபாக்கியம், மாவட்ட பிரதிநிதி கே.கே.பி விஜயன், கணேசன், சொக்கலிங்கம், பொன்சிங், கனகவேல்,சேவியர் ராஜ், மற்றும் சாம்ராஜ் ,சகாயராஜ் ,பால ஜெயம் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டணர்.