12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்

முதல்வர் ஆணைக்காக காத்திருப்பு:

அரசு பள்ளிகளில் 11 ஆண்டாக பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் கேட்டு,

பள்ளிக்கல்வி அமைச்சர்,

பள்ளிக்கல்வி செயலாளர்,

பள்ளிக்கல்வி ஆணையர்,

மாநில திட்ட இயக்குனர்,

முதல்வர் செயலாளர்-1,
தலைமைச்செயலாளர்,

முதல்வர் அலுவலகம்

என
அனைத்து நிலையிலும்

“பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு”
சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் உரிய நடவடிக்கை எடுத்து இதுவரை பொங்கல் போனஸ் வழங்கவில்லை.

எனவே, இனி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான், பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது குறித்து
ஆணையிட வேண்டும்.

அப்பொழுது தான் பொங்கல் போனஸ் கிடைக்கும் என பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் மற்ற துறைகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரிகிற, பகுதிநேர ஊழியர்களுக்கு எல்லாம் பொங்கல் போனஸ் கிடைக்கிறது.

ஆனால் பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிகிற பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டுமே ஒருமுறைகூட பொங்கல் போனஸ் கிடைக்கவில்லை. இது மனிதநேயமில்லை.

மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்தை பெற, பொங்கல் போனஸ் கேட்டு ட்விட்டரிலும் தினமும் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஆளும் கட்சி திமுக, எதிர்கட்சி அதிமுக,
பாஜக தவிர,
மற்ற எல்லா அரசியல் கட்சிகளும் இந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று அறிக்கை மூலமாக அரசை வலியுறுத்தி உள்ளார்கள்.

மேலும், திமுக தேர்தல் வாக்குறுதிபடி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அனைத்து கட்சிகள் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் உண்டு என ஆணையிட்டு வழங்க வேண்டும் என்று “பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு” சார்பில் மீண்டும் நினைவூட்டுகிறோம்.

இந்த கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிறைவேற்றி, 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி செய்தியை அறிவிக்க வேண்டுகிறோம்.

இங்கனம் :
எஸ்.செந்தில்குமார்
செல் : 9487257203
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *