கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் இன்று காலை சுமார் 8.15 மணியளவில் கமலம் (வயது சுமார் 59) என்ற தேயிலை தோட்டப் பணியாளரை கள எண் 7A -ல் தேயிலை பறிக்க சென்ற போது தேயிலை செடியினுள் இருந்த வந்த கரடி ஒன்று அவரை தாக்கியதில் அவர் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் கரடி தாக்கியதில் வலது கை மற்றும் தலையில் காயமடைந்த நிலையில்
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர், உதவி வனப்பாதுகாவலர், வால்பாறை- வனச்சரக அலுவலர் ஜி.வெங்கடேஷ் ஆகியோர், அரசு மருத்துவமனையில் கரடி தாக்கிய தொழிலாளியை பார்வையிட்டு, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் உடனடி நிவாரண நிதியாக ரூ.10.000/- (பத்தாயிரம்) வழங்கினார் ஆறுதல் கூறினார்
கரடி தாக்கிய நபர் தர்போது நலமாக உள்ள நிலையில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *