கமுதியில் இலவச கண்சிகிச்சை முகாம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,
மதுரை ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை மற்றும் கமுதி என்விஷன்
ஆப்டிகல்ஸ் இணைந்து நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்
இதில் டாக்டர் சீனிவாசன் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது.
திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,டாக்டர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயசெந்தில்,பணியாளர்கள் பிராபாகரன்,ஹத்திஷ், நந்தா, முத்துராஜ் மற்றும் ஆப்டிகல் உரிமையாளர் முகமது நசீர் ஆகியோர் முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
இதில் சிறுவர்கள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என பேர் இந்த முகாமில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இம் முகாமில் சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு விழித்திரை சிகிச்சை,கண்ணீர் அழுத்த நோய்,
மாறுகண் உட்பட பல்வேறு சிகிச்சை செய்யப்பட்டது.
முகாமில் 100 பேருக்கு கண் கண்ணாடிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கண்புரை அறுவை சிகிக்சைக்கு 46 நபர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.