மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 நிவாரணம் வழங்க வேண்டும் பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வருகை புரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் .எம்.பி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்….
அப்போது அவர் கூறியதாவது…..

தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்ற செங்கரும்பு அச்சுவெல்லம், உருண்டை வெல்லம் ஆகியவற்றை நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டும் , தஞ்சை ,நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ஆகிய டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சம்பா தாளடி நெற்பயிர்கள், முழுமையாக ஒரு விவசாயிகள் கூட விடுபடாமல் கணக்கெடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரண வழங்க வேண்டும் ,மேலும் கரும்பு ,வாழை, வெற்றிலை, மஞ்சள் மற்றும் கிழங்கு வகைகள் முழுமையாக அடியோடு சாய்ந்து விட்டது.

வேளாண்மை துறை அதிகாரிகளும், தோட்டக்கலை அதிகாரிகளும், ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,முழுமையாக பாதித்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 35 ஆயிரம் வழங்க வேண்டும், ஆயிரம் நாட்களுக்கு மேலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமண்டங்குடி திருஆரூரான் கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்குவதற்கு உரிய தீர்வு காண வேண்டும்,டெல்டா மாவட்டங்கள் வறண்ட மாவட்டமாக மாறாமல் தடுப்பதற்கு மேகத்தாது அணை கட்டுவதை தடுப்பதற்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்,தஞ்சாவூர் -அரியலூர் மாவட்டம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே குடிகாடு மேல ராமநல்லூர் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் .கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் வருகின்ற வாய்ப்புகள் உள்ளது தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் குறித்து முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது உடன் மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், மாவட்டத் தலைவர்கள் சங்கர் , சேகர், வட்டாரத் தலைவர்கள் சேதுராமன், விவேக், மாவட்டத் துணைத் தலைவர் மாஸ்கோ, மாநில இளைஞரணி செயலாளர் அசோக்குமார், மாநில சிறப்பு அழைப்பாளர் ஜெயக்குமார், விவசாய அணி அமைப்பாளர் முருகராஜ், இளைஞரணி தலைவர் விஜய் , மாணவரணி தலைவர் கருண் , இளைஞரணி துணைத் தலைவர் விஜய் சங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், மற்றும் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *