கமுதியில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 100 க்கும் மேற்பட்டோர் கைது கமுதி,ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், பாஜக மற்றும் இந்து முன்னணியினர் நேற்று மாலை பெருமாள் கோயில் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதன் கடந்த 3-ம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உத்தரவிட்டும் மேற்படி உத்தரவினை செயல்படுத்தாத திமுக அரசனை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மஹாலில் தங்க வைத்தனர்.