துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூரில்”உழைப்பாளர் முன்னேற்றக் கழக” கொடி ஏற்று விழா மற்றும் நலவாரியம் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவர் இரா.ஆறுமுகம் கலந்து கொண்டு கழக கொடி ஏற்றி நலவாரிய அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய தலைவர் ஆறுமுகம், உழைப்பாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கட்சியின் வளர்ச்சிக்கும் நமது சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருந்து நம் சமுதாய மக்களை நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அரசின் நல திட்டங்களை பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இவ்விழாவில் மாநில துணை தலைவர் பிஎல்கே.கோவிந்தராஜ், மண்டல பொறுப்பாளர் ஆர். வெங்கட், அவைத்தலைவர் ஆர்.கோவிந்தராஜ்,திருச்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பி.ஏ.குமரவேல், துறையூர் ஒன்றியச் செயலாளர் சி. ஜெய்சங்கர், நலவாரிய திருச்சி மாவட்ட தலைவர் பூங்கொடி மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர்,கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்