வடலூரில் முன்விரோதம் காரணமாக, ஜல்லி, மணல் வியாபாரியை கொலை செய்ய முயற்சி நான்கு பேர் கைது மூன்று பேருக்கு வலைவீச்சி
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் தென்குத்து கீதா நகரைச்சேர்ந்தவர் தெய்வ சிகாமணி மகன் ராஜா (43), லாரி வைத்துக்கொண்டு ஜல்லி, செங்கல், மணல் விற்பனை செய்து வருகிறார்,
இவர் வடலூர் பண்ருட்டி ரோட்டில்,தனியார் திருமண மண்டபம் அருகில் பாணி பூரி கடையில் அருகேநேற்று முன்தினம் இரவு நின்று பாணிபுரிசாப்பிட்டுக்கொண்டு இருந்தார், ராஜா மகன், வசீகரனுக்கும், ஆபத்தாரணபுரம், இளங் கோவன் மகன் பிரதீப் குமாருக்கும், முன்விரோதம் காரணமாக,அங்கு மோட்டார் சைக்கிள் வந்த,
ஆபத்தாரணபுரம் பிரதீப்குமார், உள்ளிட்ட ஏழுபேர் கொண்ட கும்பல், ராஜாவிடம் உன் மகனை ஒழுங்காக வளர்க்க மாட்டியா?உன்னையும் உன் மகனையும் போட்டு தள்ளி விடுவோம் என வீச் அரிவாளையும், இரும்பு பைப்புகளை, காட்டி மிரட்டினார்கள்,கொலை செய்யும் நோக்கில்,வீச்சருவாளை கொண்டு வெட்டும்,அங்கிருந்து ராஜா தப்பி ஓடினார்,நண்பர்கள் உதவியுடன் பத்திரமாக வீட்டில் கொண்டு சேர்த்தனர், மறுநாள் வடலூர்காவல் நிலையத்திற்கு புகார் செய்தார்.புகாரை யொட்டி,வடலூர் போலீசார் வரதராஜன் பேட்டை சச்சிதானந்தம் மகன்
துரைராஜ் (35),பேய்க்கேநத்தம், சுந்தரமூர்த்தி மகன் மனோமூர்த்தி (29)குருவப்பன் பேட்டை சுக்கிரவேல் மகன் சுந்தர்ராஜ் (30) வெங்கடாம் பேட்டை பன்னீர்செல்வம் மகன்பஞ்சாட்சரம் (21)ஆகிய நான்கு பேர்களை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து நான்கு மோட்டார் சைக்கிள், நான்கு வீச்ச அருவாள், இரும்பு பைப்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும், தலைமறைவாக ஆபத்தாரணபுரம்பிரதீப்குமார்,காட்டுக்கொல்லை, மண்டை ஓடு என்கிற சந்துரு,கள்ளையம் குப்பத்தை சேர்ந்த கந்தன் ஆகியமூன்று பேர்களை தேடி வருகிறார்கள் .