கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சி அய்யர்மலையில் ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் கட்டும் பணியை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்இ.ஆ.ப. கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம், சத்தியமங்கலம் ஊராட்சி, அய்யர்மலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் கட்டும் பணியை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.

இவ்விளையாட்டு அரங்கம் சுமார் 7.00 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.
இந்த சிறு விளையாட்டு அரங்கத்தில் நிர்வாக அலுவலகம், பார்வையாளர்கள் அரங்கம், 8 தடகளப் பாதைகள், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கோ-கோ, நீளம் தாண்டுதல், கபாடி, தடைகள் தாண்டும் பாதை, செயற்கை புல் தரை கிரிக்கெட் விளையாட்டு மைதானம், நுழைவாயில் ஆர்ச், கம்பி வேலி பென்சிங், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கருவி, பதக்க மேடை, மழைநீர் வடிகால்,5 சோலார் மின் விளக்குகள், தீயணைப்பு சாதனங்கள், விளையாட்டு சாதனங்கள், ஆழ்துளை கிணறு மற்றும் இடிதாங்கி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீ.ரெ.வீரபத்திரன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *