பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் திருப்பணி தொடக்க விழா….
பாபநாசம் அருகே நல்லூர் கிரி சுந்தரி அம்பாள் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் திருப்பணி தொடக்க விழா 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக
பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அது சமயம் கணபதி ஹோமம் வாஸ்துசாந்தி கடம் புறப்பாடு நடத்தி மேளத்தாளங்கள் நாதஸ்வரம் முழங்க வாணவேடிக்கையுடன் திருப்பணி நடைபெற்றது.
விழாவில் வேலப்பன் தம்பிரான் சாமிகள், கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் குணசேகரன், கோயில் குருக்கள்கள் ரமேஷ், தண்டபாணி, மணிகண்டன் மற்றும் உபயதாரர்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.