பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் பூலோகநாதர் திருக்கோவிலில் வாழைக்கன்று நடுவதற்காக குழி தோண்டிய போது பழங்காலத்து உலோக அம்மன் சிலை கண்டெடுப்பு….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டையில் உள்ள கீழகோவில்பத்து கிராமத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த பூலோகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது..
கோவில் நிர்வாகத்தினர் வாழைக்கன்று நடுவதற்காக கோவில் வளாகத்தில் இரண்டு அடியில் குழி தோண்டினர் அப்பொழுது ஒரு அடி உயரமுள்ள பழங்காலத்து ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
சிலை கிடைத்த தகவல் பக்தர்கள் , பொதுமக்கள் மத்தியில் பரவியதால் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர் இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ராமச்சந்திரன், அம்மாப்பேட்டை வருவாய் ஆய்வாளர் ராஜா ,கீழ கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதன், ஆகியோர் பார்வையிட்டு பாபநாசம் வட்டாச்சியர் பழனிவேலுக்கு தகவல் தெரிவித்து பாதுகாப்பாக எடுத்துச் செநடவடிக்கைஎங்கஎங்க எடுத்து வருகின்றனர்.
இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியவன் மற்றும் போலீசார் சிலை கிடைத்த இடத்தில் நேரில் பார்வையிட்டனர்.