பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
இ-பைலிங் முறையை கட்டாயமாக்கியதை கண்டித்து பாபநாசத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாநிலை அறவழிப் போராட்டம்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025 முதல் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கிய சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்து உண்ணாநிலை அறவழிப் போராட்டம் நீதிமன்றம் வளாகம் முன்பு நடைபெற்றது .இப்போராட்டத்திற்கு பாபநாசம் வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மணிகண்டன், வழக்கறிஞர்கள் ஜெயக்குமார், கண்ணன், இளையராஜா, அன்புமணி பாலசுப்பிரமணியன்,, சதீஷ், நிசார் அகமது, விக்னேஷ், சங்கீதா, ரசியா கனி, மதுபாலா, சரவணன் , கோபி என்கிற கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.