கோவையில் கச்சேரி குயில்கள் பாடல் குழுவின் எஸ்.பி.பி.நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகர் வள்ளல் சக்கரவர்த்தி பிரதீப் ஜோஸ் மேடையில் பாடி அசத்தினார்..

திரையிசை பாடல் பாடுவதில் ஆர்வமுடைய சாதாரண பாடகர்களையும் இணைக்கும் வகையில் ஸ்மூலே எனும் செயலி வாயிலாக கச்சேரி குயில்கள் குழுவினர் இணைந்து பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்..

இந்நிலையில் கச்சேரி குயில்கள் குழு சார்பாக மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி. நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..இதில் எஸ்.பி.பி.பாடிய தங்கள் அபிமான பாடல்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டு தனது பாடி அசத்தினர்..

நிகழ்ச்சியில்,சிறப்புவிருந்தினராக,பிரபலநடிகர்,தயாரிப்பாளர்,தொழிலதிபர்,தற்காப்பு கலை வல்லுனர்,சமூக சேவகர் என பன்முகங்களை கொண்டவரும்,வள்ளல் சக்கரவர்த்தி என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் பிரதீப் ஜோஸ் கலந்து கொண்டார்..

தொடர்ந்து அவர் மேடையில் மலையாளம்,தமிழ் என இரு மொழிகளிலும் பாடல்களை பாடி அசத்தினார்..இதில் அவரது ரசிகர்கள் விசிலடித்தும் கைகளை தட்டியும் அரங்கில் நடனமாடி உற்சாகம் அடைந்தனர்..
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாடல் பாடும் திறமைகள் இருந்தும் மேடை கிடைக்காத திறமையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெறும் இது போன்ற நிகழ்ச்சிகளை தாம் வரவேற்பதாகவும்,எஸ்.பி.பி.நம்மை விட்டு மறையவில்லை என்று கூறிய அவர்,அவரது பாடல்கள் என்றும் அவரை நினைவு கூறும் என நெகிழ்ந்து பேசினார்.. சாதாரண பாடகர்களையும் இணைக்கும் வகையில் நடைபெற்ற கச்சேரி குயில்கள் குழுவின் நிகழ்ச்சியில் பாடல் பாடுவதில் ஆர்வமுடைய பல்வேறு துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் அபிமான பாடல்களை பாடி மகிழ்ந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *