கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் ஒண்பதாவது ஆண்டு விழா, நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமி மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா கோவையில் வெகு விமரிசையாக நடைபெற்றது…

கோவையில் நடிகர்,நடிகைகள், நாடக நடிகர்கள், துணைநடிகர், நடிகையர், மேடை நடிகர்கள் என நூற்றுக்கணக்கானவர்களை ஒன்றிணைத்து கோவை மாவட்ட நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது..

கடந்த ஒன்பது ஆண்டுகளாக சின்னத்தரை மற்றும் சினிமா நடிகர்,நடிகைகள், நல்வாழ்விற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் ஒண்பதாவது ஆண்டு விழா,நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமியின் 156 வது பிறந்த நாள் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 96 வது பிறந்த நாள் விழா முப்பெரும் விழா கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் அஜ்மீர் சாகுல் தலைமையில் நடைபெற்றஇதில்நிர்வாகிகள்ஜெயன்,பூபேஷ்,ராஜன்,மூர்த்தி,மற்றும் வள்ளிமயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக பிரபல நகைச்சுவை நடிகர் சாப்ளின் பாலு,விஜய் டிவி புகழ் ரூபினா, ரூபிசீனா ஆகியோர் கலந்து கொண்டனர்..விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு திறமை வாய்ந்த கலைஞர்களின் பல்வேறு மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.தொடர்ந்து பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன..

விழாவின் ஒரு பகுதியாக இந்த ஆண்டிற்கான புதிய உறுப்பினர் அட்டை, வழங்கப்பட்டது.. இந்த விழாவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கலைஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *