எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி. மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் தங்கள் படைப்புகளுடன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி துவங்கியது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜ்கமல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி, உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமலிங்கம் துணை முதல்வர் பிரசன்னா மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட 50 க்கும் க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ,மாணவிகள் தங்கள் அறிவியல் படைப்புகளுடன் வருகை தந்திருந்தனர்.

நிகழ்ச்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மாணவ,மாணவிகளின் அனைத்து படைப்புகளையும் நேரில் பார்வையிட்டு அவற்றின் செயல் விளக்கம் குறித்து கேட்டறிந்து மாணவ, மாணவிகளை வாழ்த்தினார். குறிப்பாக விபத்து காலங்களில் அவசர ஊர்த்தி வேகமாக செல்லும் விதத்தில் சாலை அமைப்பது குறித்த படைப்பு, நீர் மேலாண்மை, குப்பைகளை உரமாக மாற்றுதல், பயனற்ற பொருட்களை கொண்டு பயன்படும் மாற்று பொருளை உருவாக்குவது, இயற்கை உணவு முறைகள் குறித்த படைப்புகள் குறித்த விளக்கம், காற்றாலை மின்சாரம் தயாரிக்கப்படுவது குறித்த அமைப்பு, தொழிற்சாலையை புகையை தூய்மை செய்யும் அமைப்பு,உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது. அறிவியல் கண்காட்சியை சீர்காழி சுற்றியுள்ள பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் நேரில் பார்வையிட்டு அவற்றின் விளக்கங்களை கேட்டு அறிந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *