உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பாபிசேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

கடந்த 2009 ம் ஆண்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடத்தப்பட்டது , தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழாவானது வெகு விமர்சியாக நடைபெற்றது.

இந்த திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி கடந்த 30-ம் தேதி மாலை 4 மணிக்கு யாக சாலை அமைக்கப்பட்டு பூஜைகள் தொடங்கப்பட்டன,

தொடர்ந்து, நேற்று காலை அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று 01.11.2023 முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி பட்டாச்சாரியர்கள் தமிழ் முறைப்படி ,யாக சாலை பூஜைகள் நடைபெற்று, நரசிம்மர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக சாலையிலிருந்து திருக்குடம் புறப்பாடு நடைபெற்று

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேயர் சுவாமி வெட்டவெளியில் தரிசனம் தருவதால் இக்கோவில் கோபுரம் இல்லாமல் கலசம் இல்லாமல் இருப்பதால் நாமக்கல்
ஸ்ரீஆஞ்சநேயரின் பாதம் அருகில் உள்ள ஆஞ்சநேயருக்கு
மூலவர் சிலைக்கு புனிதநீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை வெகு விமரிசையாக நடத்தினர்.
அப்போது 18 அடி உயரம் உள்ள ஸ்ரீஆஞ்சநேயனியருக்கு மலர் தூவி அர்ச்சனை செய்தனர்

முன்னதாக காலை 7 மணிக்கு அனுமன் ஹோமம், தாரா ஹோமம் நடைபெற்றன திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி காலை 11:45 மணிக்கு சர்வ தரிசனம்.

இந்த திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன், எம்.பிக்கள் கே. ஆர். என் ராஜேஷ்குமார், ஏ. க. பி. சின்ராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் பே. ராமலிங்கம், கே. பொன்னுசாமி , ஈ. ஆர. ஈஸ்வரன் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச. உமா, கோவை மேற்கு மண்டல ஐ. ஜி. மகேஷ்வரி, சேலம் டி. ஐ. ஜி இராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ் கண்ணன் . மாவட்ட அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள்

உள்ளாட்சி பிரதிகள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர்.

முன்னதாக இந்த பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக SP இராஜேஷ் கண்ணன் தலைமையில் 800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆஞ்சநேயர் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி நாமக்கல் தாலுக்கா முழுவதும் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அதேபோல போக்குவரத்துகளும் நேரம்,பாதை
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *