குடவாசல் அருகே பூந்தோட்டத்தில் நடைபெற்ற 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 23 கட்டுரைகள் மண்டல மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்ட அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் 31- வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நன்னிலம் ஒன்றியம், பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் லலிதா ராமமூர்த்தி மாநாட்டை துவங்கி வைத்தார், பள்ளி முதல்வர் முத்துராஜ் வரவேற்றார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி பி எஸ் இ பள்ளிகள் மற்றும் துளிர் இல்லம் சார்ந்த குழந்தை விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இதில் ஆரோக்கியம் மற்றும் நல வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது என்ற தலைப்பின் கீழ்முதுநிலை, இளநிலை பிரிவுகளில் 323அறிவியல் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர்,

இவற்றை30பேர்கொண்ட கல்லூரி பேராசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் குழுவினர் மதிப்பீடு செய்தனர். திருவாரூர் மாவட்ட அறிவியல் இயக்க துணை தலைவர் தண்டபாணி தலைமையில் 23 ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, புதுக்கோட்டையில் நடைபெறும் மண்டல மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சியாக புதுடெல்லி விஞ்ஞான பிரசார் முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு அறிவியல் மனப்பான்மை என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் குழந்தை விஞ்ஞானிகள் மற்றும் ஆசிரியர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்,பள்ளி செயலாளர் சந்தோஷ், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) சௌந்தர்ராஜன் மற்றும் அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் ஸ்டீபன் நாதன், மாவட்டத் தலைவர் பொன்முடி, மாவட்ட பொருளாளர் சாந்தகுமாரி, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் விஜயன், கல்வி ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் மற்றும் வானவில் மன்ற தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *