பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை திரௌபதி அம்மன் ஆலயத்தில் 108 கிலோ ஐம்பொன் ஐயப்பன் சிலை உற்சவர் விழா…

தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறையில் உள்ள. ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 108 கிலோ புதிய ஐம்பொன் ஐயப்பன் சிலை உற்சவர் விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

அதுசமயம் ஐயப்பனுக்கு சிறப்பு நெய் அபிஷேகம் வீதியுலா மற்றும் படிபூஜை நடைப்பெற்றது.
திருப்பாலைத்துறை திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஐயப்பன் சாமிக்கு கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், சாஸ்தாஹோமம் நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து ஐயப்பன் சாமி அலங்காரத்துடன் செண்டை மேளம் முழக்கத்துடன் வானவேடிக்கையுடன் வீதியுலா காட்சி நடைப்பெற்றது.

சாமி புறப்பட்டு 108 சிவாலயம் வந்தடைந்து தீபாராதனை நடைப்பெற்றதுஅங்கிருந்து புறப்பட்டு சீனிவாச பெருமாள் கோவில் 4 ராஜ வீதிகள் வழியாக பாபநாசம் ஸ்ரீ தங்க முத்து மாரியம்மன் திருக்கோவில் வந்தடைந்தது.

இரவு சிறப்பு படி பூஜைகளும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாபநாசம் ஐயப்பன் யாத்திரை குழுவினர் செய்திருந்தனர் இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *