கிருஷ்ணகிரி மாவட்டம் தட்டரஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மகா கணபதி மற்றும் ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோவில் புதியதாக கட்டப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் கண்டது. கும்பாபிஷேக விழாவிற்கு சுற்று வட்டார 28 கிராமங்களை சேர்ந்த 5000த்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இன்று அதிகாலை முதல் நாடி சந்தானம், இரண்டாம் கால யாக பூஜை, ஸ்பர்சாஹூதி பூஜை, பூர்ணாஹூதி பூஜை, தீபாராதனை, யாத்ராதானம், கிரகப்ரீதி, கடம்பறப்பாடு ஆகிய தீபாரதனைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கலசங்கள் புறப்பாடு, கோபுர விமானம், ஸ்ரீ மகா கணபதி மற்றும் ஸ்ரீ ஊர் மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தட்டரஹள்ளி, சோப்பனூர், ஆவத்துவாடி, பென்னேஸ்வரமடம், அகரம் உள்ளிட்ட 28 கிராம பகுதிகளில் இருந்து 5000த்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்துக்கொண்டு கடவுளின் ஆசியை பெற்றனர். பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாகரசம்பட்டி காவல் துறையினர் விழாவிற்கு பாதுகாப்பு அளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *