செய்தியாளர். ச.முருகவேலு.
நெட்டப்பாக்கம்.

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையை கண்டித்து அரசு மருத்துவமனை எதிரே விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுவை நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர் இல்லாத காரணத்தால் அரசு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமித்து அரசு, மருத்துவமனையை இயக்கி வருகிறது இதனால் நோயாளிகள் தங்கள் நோய் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சரிவர தீர்வு பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக நிலவுகிறது.

மேலும் சர்க்கரை நோயாளிகள் வார இரண்டு நாட்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குவிவதால் நிலமையை சமாளிக்க முடியாமல் மருத்துவமனை திணறுகிறது. மேலும் இந்த அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவம் கண் மருத்துவம், இயன் மருத்துவம், பல் மருத்துவம், போன்ற அனைத்தும் இருந்தும் நிரந்தர டாக்டர் இல்லாத குறை நீண்டகாலமாக உள்ளது.

மேலும் இந்த மருத்துவமனைக்கு நெட்டப்பாக்கம் பகுதி மட்டுமல்லாது தமிழக பகுதிமக்களும் அதிக அளவில் வருவது குறிப்பிடத்தக்கது. புதுவை அரசு கடந்த 2013 − 2014 ம் ஆண்டுகளில் இருந்தே நிரந்தரமாக மருத்துவர் பதவியை நிரப்பப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனை கண்டித்து நெட்டப்பாக்கம் விடுதலை சிறுத்தை கட்சியினர் தொகுதி தலைவர் மலரவன் தலைமையில், மாநில துணைச்செயலாளர் கதிர்.பிரபாகரன் , இளம்தென்றல், காவியச்செல்வன், மகி, பனையடிக்குப்பம் முருகன், அரங்கப்பன்னீர், அங்காளன், சங்கத்தமிழன், குருமூர்த்தி, மதியழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே ஒன்றுதிரண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிரந்தர மருத்துவர் நியமிக்காததை கண்டித்து கோழங்கள் எழுப்பினர். நோயாளிகள் உரிய சிகிச்சை பெறமுடியாமல் தவிப்பதை உணர்த்த ஆளும் மாநில என்.ஆர் காங்கிரஸ். பாஜக விற்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தனர். தகவல் அறிந்த திருபுவனை உதவி ஆய்வாளர் ராஜசேகர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து ஆர்பாட்டம் நடத்திய விடுதலைசிறுத்தை கட்சி நிர்வாகிகளிடம் பேசினார். இதனைத் தொடர்ந்து அரைமணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *