விவசாயிகளின் நலனுக்காக இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கடந்த 22.11.2023 அன்று முன்னெடுத்த நூதன போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசு விவசாயிகளுக்கு வழங்க பல் வேறு சலுகைகளுக்கு துணைநிலை ஆளுநர் திடிர் என்று ஒப்புதல் அளித்துள்ளார்.

📍புதுச்சேரி அரசு 28.11.2023 அன்று எடுத்த கொள்கை முடிவுகள் …

  1. பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் முதலீட்டு மானியம் மற்றும் இடுபொருள் மானியத்திற்கு பதிலாக “பயிர் உற்பத்தி தொழில்நுட்பத் திட்டத்தின்கீழ்“ (Crop Production Technology Scheme) பயிர் சாகுபடி செலவு மானியம் (அ) உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கும் விதமாக நடைமுறையில் உள்ள விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனால்…
  2. இயற்கை வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 8,000 வீதம் சொர்ணவாரி மற்றும் சம்பா (அ) சம்பா மற்றும் நவரை ஆகிய இரண்டு பருவகாலங்களுக்கு வழங்கப்படும்.
  3. பயிர் வகைகள், எள் சாகுபடி மற்றும் சிறுதானியங்கள் சாகுபடிக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் உற்பத்தி ஊக்கத்தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 3,000 மற்றும் ரூ. 5000 தொகையுடன் இடுபொருள் மானியமாக ரூ. 2000 வழங்கப்படும்.
  4. கடலை சாகுபடிக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் உற்பத்தி ஊக்கத்தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 5,000 தொகையுடன் இடுபொருள் மானியமாக ரூ. 3,000 வழங்கப்படும்.
  5. நிலத்தின் ஊட்டச்சத்து மற்றும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, இயற்கை வேளாண் இடுபொருட்களான தழை உரம், மண்புழு உரம், ஜிப்சம், போன்றவை பொது விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் அட்டவணை இன விவசாயிகளுக்கு இலவசமாகவும் வழங்கப்படும்.
  6. சாகுபடிக்குத் தேவையான நெல் விதைகள் பொது விவசாயிகளுக்கு கிலோ ரூ. 10 மானிய விலையிலும், அட்டவணை இன விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் வழங்கப்படும்.
  7. இயற்கை உரங்கள், பூச்சுமருந்துகள், வேப்பம் பிண்ணாக்கு ஆகியவை பொது விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் அட்டவணை இன விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்திலும் வழங்கப்படும்.

📍இவை வெறும் வாய்மொழி அறிவிப்பாக மட்டும் இருந்து விடாமல் விவசாயிகளுக்கு உடனுக்குடன் சலுகைகளை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அப்போது தான் அது விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக அமையும்.

📍 உதாரணமாக அரசு அறிவித்த நெல் விதைக்கான ரூ.10 மானியம் நடப்பு சம்பா பருவத்திற்கு முன்பே துரிதமாக வழங்ப்பட்டு இருக்க வேண்டும். தற்போது சம்பா நெல் கதிர் வரும் வேளையில் அறிவித்திருப்பது காலதாமதம். எனினும், கடந்த 22.11.2023 அன்றைய இயக்கத்தின் போராட்டத்திற்கு பிறகு அரசு அறிவித்த முடிவை இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் அன்போடு வரவேற்கிறது. மேலும், விவசாயிகளுக்கு கூடுதல் சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும்.

📍எடுத்துக்காட்டாக, நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நிலம் வளர்ச்சி (Land Development) பிரிவின் கீழ் பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு அமர்த்த அரசு நடவடிக்கைகள் எடுத்தால் சாகுபடி கூடும். கேரள மாநிலம் நல்ல உதாரணம். சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரி நிர்வாகம் விவசாயத்திற்காக வேலை ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இதுவரை ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது. நல்லாட்சியை உறுதி செய்ய வேண்டும்.

📌 விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு அரசியல் சாராமல் சட்டப்படி இதுபோல தீர்வுகள் காண இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை தொடர்பு கொள்ள +919366666454.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *