தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியை அவர் லேண்ட் நிறுவனம் செய்து வருகிறது 60 வார்டுகளிலும் பணியாளர்கள் மூலம் தெருக்களி தேங்கின்ற குப்பைகளை சேகரித்து குப்பை உரக்கிடங்கில் ஒப்படைக்கும் பணியை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிபிஐ எம்எல் சங்கத்தின் மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கு தூய்மை பணியாளர்களை வருமாறு தூய்மை பணியாளர் சங்கத் தலைவர் பொன்ராஜ் தனது வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் அவர்லாந்து நிறுவன மேலாளர் முருகேசன் தூய்மை பணியாளர் சங்க தலைவர் பொன்ராஜ் சஸ்பெண்ட் ஆர்டர் வழங்கும் குட்டி அணி வாகன ஓட்டக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார் இதனை அடுத்து அந்தந்த தெருக்களில் குப்பை அள்ளிக் கொண்டு இருந்த தூய்மை பணியாளர்கள் குப்பையுடன் அவர் லேண்ட் அலுவலகம் உள்ள சிதம்பர நகருக்கு 50க்கும் மேற்பட்ட குப்பைகளுடன் குப்பை வண்டி நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத அடுத்து குப்பை வண்டிகளுடன் மாநகராட்சி அலுவலகத்திற்குள் குப்பை வண்டியை நிறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுவரை வரலாற்றிலேயே குப்பை வண்டிகளுடன் வந்து மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தியது கிடையாது முதன்முதலாக தூய்மை பணியாளர்கள் மாநகரில் அள்ளப்பட்ட குப்பையுடன் மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் தூய்மை பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பொன்ராஜ். சகாயம். விடுதலை சிறுத்தை கட்சி மண்டல துணைச் செயலாளர் வக்கீல் அர்ஜுன். சமூக ஆர்வலர் வக்கீல் மாடசாமி. விடுதலை சிறுத்தை கட்சி செய்தி தொடர்பாளர் செல்வகுமார் உள்ளிட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்