அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது அரியலூர் செந்துறை திருமானூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த மருந்து வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி

அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையும் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கமும் இணைந்து அரியலூரில் உள்ள ஏ ஒய் எம் மினி ஹால் திருமண அரங்கத்தில் நடந்தது அரியலூரில் உணவு பாதுகாப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பயிற்சியும் விளக்கமும் அளித்தனர்

கூட்டத்திற்கு மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் ஜி கருணாகரன் தலைமை தாங்கினார் அமைப்புச் செயலாளர் அரியலூர் ஜவகர் மெடிக்கல்ஸ் ஜவகர் அலி முன்னிலை வகித்தார் சில்லறை மருந்து வணிகர் சங்க செயலாளர் எம் அசோக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்

பொருளாளர் சங்கர் அனைவருக்கும் நன்றி கூறினார் அக்பர்அலி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் கார்த்திகேயன் மணிவர்மன் மணிமாறன் விஜயகுமார் மாணிக்கம் உட்பட மருந்து வணிகர்கள் கலந்து கொண்டனர்

திருமானூர் பார்கவி மெடிக்கல்ஸ் நடராஜன் கீழப்பழுவூர் ஆண்டவர் மெடிக்கல் சபியுல்லா மீனாட்சி மெடிக்கல்ஸ் ஆனந்தன் சத்யா மெடிக்கல்ஸ் மணிமாறன் அரியலூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவசங்கரி அனுரஞ்சனி டாக்டர் பூபதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *