பொம்மிடியில் பாரதிய ஜனதா கட்சிசார்பில்தொகுதி வாக்காளர்கள் சீர்திருத்த பயிற்சி
தமிழக விவசாயிகள் அணி மாநில தலைவர் நாகராஜன் கலந்து கொண்டார்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பயிலரங்கம் நிகழ்ச்சிபொம்மிடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்றது
இந்தப் பயிற்சி அரங்கத்தினை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சியினருக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்
பின்பு பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன் போலி வாக்காளர்களை எவ்வாறு அடையாளம் கண்டு வெளியேற்ற வேண்டும், ,திமுகவினர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதற்கும் பெருமளவு முயற்சி செய்வார்கள் அவற்றை தடுக்கும் விதத்தில் வாக்காளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் தீவிரமாக கண்காணித்து போலி வாக்காளர்களை வெளியேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்
இன்னும் சில தினங்களில் விவசாய அணி சார்பில் நடைபெறுகின்ற மாநில மாநாட்டிற்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்எனவும் புதிதாக கழகம் துவங்கியுள்ள அதிமுகவிலிருந்து பிரிந்து செயல்படும் ஓபிஎஸ் ஆரம்பித்துள்ள புதிய கழகத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்
மேலும்ஆளுகின்ற திமுக அரசு தமிழ்நாட்டு மக்களை மதம் ஜாதி பாகுபாடுகளை உருவாக்கி பிரித்து மோதல்களையும் உருவாக்கி வருகிறது,மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்குபல்வேறு கட்டங்களாக முயற்சிகளை மேற்கொண்டாகும் ஆளும் மக்கள் விரோத தி.மு.க. அரசு தடைகளை ஏற்படுத்தி வருகிறது என எனது பேச்சில் குறிப்பிட்டார்
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் வரதராஜன், அமைப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் | தர்மபுரி அமைப்புச் செயலாளர் சாமி கண்ணு ,இணை அமைப்பாளர்கள் சங்கீதாமற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஒருநாள் பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர் மேலும் பல்வேறு கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள்தங்களை பாரதிய ஜனதா கட்சியின் இணைத்துக் கொண்டனர்