துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூரில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீமார்கண்டேயன் கோவிலில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பாக108 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.இதில் நூற்றிற்கும் மேற்பட்ட பெண்கள் பயபக்தியுடன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.இதில் கிளை தலைவர் ராஜ மன்னார் குருசாமி, செயலாளர் உதயகுமார் மற்றும் கீரிப்பட்டி கிளை செயலாளர் மகேஸ்வரன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்