சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு கலைக் கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு அரக்கோணம் மற்றும் சேலம் மாவட்ட வருவாய் துறை மற்றும் மேட்டூர் தீயணைப்பு துறை சார்பில் தேசிய பேரிடர் நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிட இடுபாடுகளில் சிக்கி உள்ள நபர்களை மீட்டு முதலுதவி அளிப்பது மற்றும் அரசின் பிறதுறையிலான மின்சாரம் வருவாய் காவல் போக்குவரத்து துறை ஒருங்கிணைத்து எவ்வாறு மீட்க வேண்டும் என்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் மேட்டூர் கோட்டாட்சியர் சுகுமார் மேட்டூர் வட்டாட்சியர் ரமேஷ் லெப்டின்ட் கமாண்டர் வைத்திலிங்கம் மற்றும் கல்லூரி முதல்வர் திருப்பதி முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது நிகழ்ச்சியில் என் எஸ் எஸ் முனைவர் வெங்கடேசன். மேட்டூர் வருவாய் ஆய்வாளர் வெற்றிவேல் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்