மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் மாவட்ட ஆட்சியர் தங்கி உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்

தமிழக அரசு மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு களத்திற்கு சென்று உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தினை தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சீர்காழி பகுதியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் வருகை புரிந்தனர்.

முதலில் வைத்தீஸ்வரன் கோவில் பகுதிக்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் கிடங்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து அங்கு உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கற்றல் திறனை கேட்டறிந்தார் பின்னர் இன்று ஒரு நாள் சீர்காழி பகுதியில் மாவட்ட ஆட்சியர் தங்கி சட்டநாதபுரம், சீர்காழி, தென்பாதி, செம்மங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று நியாய விலை கடை, ஆரம்ப சுகாதார நிலையம், இ சேவை மையம், கூட்டுறவு நகர வங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆதிதிராவிடர் நல விடுதி, முதியோர் இல்லம், பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

குறிப்பாக இந்த பகுதிகளில் அனைத்து துறை அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் பெற்று அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்பதே ஆகும் எனவே சீர்காழி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களை தேடி வரும் அலுவலர்களை சந்தித்து தங்களுக்கு உண்டான குறைகளை தெரிவித்து உடனடி தீர்வை தேடி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்த பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *